82.38 F
France
December 11, 2024
இந்தியாஇலங்கை

அன்பர்களே இன்று வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்… ராசி பலன் – 05.07.2023

இன்று, புதன்கிழமை, ஜூலை 5, சந்திரன் சனியின் ராசியான மகர ராசியில் நாள் முழுவதும் உத்திராடம், திருவோணம் சஞ்சரிக்க உள்ளார். மிதுன ராசியில் உள்ள திருவாதிரை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நாள். இன்று திருவோண விரதம், அமிர்த யோகம், சித்த யோகம் கூடிய சுபமுகூர்த்த தினம்.

மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

​எதிர்பாராத உதவிகளால் எதிலும் சாதக பலனைப் பெறுவீர்கள். முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். நீர் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகளும், பலன்களும் கிடைக்கும்.

உத்தியோகம், தொழிலில் இருந்த தடைகள், நெருக்கடியான சூழ்நிலைகள் மாறி சாதகமான நாளாக அமையும். பணியிடத்தில் உங்களின் பணிச்சுமை குறையும்.

ரிஷபம்

மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறைவதற்கான நாள் உயர்கல்வி கற்ற கொண்டிருப்பவர்கள் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் ஆகியோருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையே விளையும் அன்னியோன்யம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் பூர்வீக சொத்து தொடர்பான காரியங்கள் சற்று காலதாமதம் ஆகும்.

​மிதுனம்

குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கோபத்தை குறைத்து கொள்வது அவசியம். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் உண்டு. உடல் அசதி அதிகமாக இருந்து வரும்.

கடகம்

 

புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை நாளை தள்ளி வைப்பது நல்லது. ​செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள்.ன் குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் சற்று கவனம் தேவை.

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதம் ஆனாலும் வெற்றிகரமாக முடியும். பெண்களுக்கு சிறப்பான நாள் ஆகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

சிம்மம்

 

காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு படிப்பை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் வெற்றி நிச்சயம்.

குடும்பத்தில் உள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். அவர்கள் உங்களை நன்றாக புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருந்து வரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும். தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும்.

வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டு. மருந்து மற்றும் மருத்துவ துறை ஆன்மீகத் துறை இயந்திரவியல் வங்கி தொழில் வரவு செலவு போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நன்மை ஏற்படும்.

துலாம்

நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். பலருக்கு பிரயாணம் செய்ய வாய்ப்புகள் உண்டாகும்.

ஒரு சிலருக்கு வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும் என்பதால் தைரியமாக பயணங்களை மேற் கொள்ளலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

புதுவிதமான விஷயங்களுக்காக பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். முன்னேற்றத்திற்கான சிந்தனை உண்டாகும். கல்வி விஷயத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை, பொறுப்புகள் குறையும். இறைப்பணியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் உறவு வலுக்கும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.

தனுசு

 

எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய நாள். பிறரின் விஷயங்களில் தலையிடாமல், உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்வது அவசியம். உத்தியோகத்தில் எதிர்பாராத பணிச்சுமை, இடமாற்றம் ஏற்படலாம். புது குழப்பம் மனதை ஆட்கொள்ளும். விளையாட்டு விஷயங்களில் சாதகமான நிலை இருக்கும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

சில நாட்களாக உங்களைக் காயப்படுத்தி வந்த விஷயங்கள் சாதகமாகும். பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புது உற்சாகமும், நம்பிக்கையும் உண்டாகும். பொது விஷயங்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களின் ஆதரவும் அதில் கிடைக்கும். உங்களின் சில விஷயங்களில் சிந்தனை மாற்றம் உண்டாகும்.

கும்பம்

இன்று சிறப்பான நாள். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதக மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். சுப நிகழ்வு நடக்க வாய்ப்புகள் உண்டாகும். காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல லாபம் உண்டாகும்.

மீனம்

திருமணமானவர்களின் வாழ்க்கையில் துணையின் நல்லாதரவு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக செல்லும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். சுப காரியத்தில் இருந்த தடைகள் நீங்கி நன்மை பெறுவீர்கள்.

உறவினர், நண்பர்கள் மூலம் உங்களுக்கு சில பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். அரசு வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் மேம்படும். சிந்தனை சிறக்கக்கூடிய நாள்.

Related posts

மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் கொழும்பு காலி முகத்திடலில் மோசமான உணவு! (VIDEO)

News Bird

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

News Bird

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது-ஷெஹான் சேமசிங்க

news

Leave a Comment

G-BC3G48KTZ0