80.58 F
France
January 19, 2025
இலங்கை

கொரோணாக்கு பிறகு மீண்டும் இலங்கை வந்த Air China விமானம்..!!

 

 

Air China விமான நிறுவனம் இலங்கையுடன் மீண்டும் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சுமார் 3 வருடங்களுக்கு முன்னர்,  Air China  விமான நிறுவனம் இலங்கைக்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் குறித்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

முதலாவது விமானத்தை வரவேற்பதற்காக  இலங்கைக்கான சீனத் தூதுவர் கட்டுநாயக்க  விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

இந்த விமானத்தில் 142 பயணிகளும் 9 விமான பணியாளர்களும் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Air China விமான நிறுவனத்தின் நேரடி விமான சேவைகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் நிலநடுக்கம் ….!

News Bird

நல்லூர் கந்தன் ஆலய,திருவிழா தொடர்பான முக்கிய அறிவிப்பு (வீடியோ)

News Bird

மலையகத்தில் பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி! (VIDEO)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0