பொலிஸ் நிலையத்திற்குள் பரஸ்பரம் தாக்கி சண்டையிட்டு கொண்ட பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் அவரது கணவரை அஹங்கம பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர், தனது கணவர் மற்றும் அவரது சகோதரிக்கு எதிராக அஹங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைக்காக மூன்று பேரும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
முறைப்பாட்டை விசாரிக்க ஆரம்பித்த போது வார்த்தை பரிமாற்றம் மோதலாக மாறி இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை கைவிட்டு, மூன்று பேரையும் கைது செய்த அஹங்கம பொலிஸ் அதிகாரிகள், அவர்களை காலி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து மூன்று பேரையும் தலா ஒரு லட்சம் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.