84.18 F
France
April 19, 2025
இலங்கை

பதுளையில் இருந்து கொழும்பு சென்ற பஸ் விபத்து : 15 பேர் வைத்தியசாலையில் (CCTV VIDEO)

இந்த பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களில் 15 போ் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது பதிவான சி.சி.டி.வி வீடியோ வௌியாகியுள்ளது.

தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று (15) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தின் 4 சக்கரங்களும் மேலே உள்ளவாறு கவிழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் இரண்டு அம்புலன்ஸ் வண்டிகளில் வைத்தியசாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பு – பதுளை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

(இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள்..)

 

Related posts

திரிபோஷா இல்லை குழந்தைகளுக்கு முட்டை வழங்குமாறு கோரிக்கை.!

News Bird

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் 193 திருத்தங்களுடன் நிறைவேற்றம்..!

News Bird

சினிமாவை மிஞ்சும் சம்பவம் : யாழில் 50 இற்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து தாக்குதல் – காவல்துறை துப்பாக்கி பிரயோகம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0