March 24, 2025
இலங்கை

32 மணித்தியாலத்தில் புதிய சாதனை படைத்த மலையக இளைஞர்கள் (Video)

யாழிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணம் மேற்கொண்டு சாதனை படைத்த இரட்டையர்கள்.

மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து, கொழும்பு காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவுசெய்து சாதனை படைத்துள்ளனர்.

சுமார் 400 கிலோமீற்றர் தூரத்தை, 32 மணித்தியாலங்களில், நடைபயணமாக கடந்து அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

பொகவந்தலாவை கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய, தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இரட்டையர்களே இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

நேற்று அதிகாலை 4 மணியளவில், யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து தமது நடைபயணத்தை ஆரம்பித்த அவர்கள், இன்று பிற்பகல் 2.30 அளவில் கொழும்பு காலிமுகத்திடலை அடைந்து, சாதனை படைத்துள்ளனர்.

பன்னாட்டுச் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், இந்தச் சாதனையை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கியுள்ளது.

Related posts

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 6000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்!

News Bird

பதுளையில் இருந்து கொழும்பு சென்ற பஸ் விபத்து : 15 பேர் வைத்தியசாலையில் (CCTV VIDEO)

News Bird

இலங்கையில் நிலநடுக்கம் ….!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0