84.18 F
France
April 19, 2025
இலங்கை

சீமெந்து விலை குறைவடைகிறது

சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 300 ரூபாவினால் குறைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீமெந்து நிறுவனங்களுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை கட்டுமானத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இரும்பு, ஓடுகள், அலுமினியம், கம்பி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

டைட்டானிக் கப்பலை பார்லையிட சென்ற சுற்றுலாப்பயணித்த நீர்மூழ்கிக் கப்பல் மாயம்

News Bird

வனிந்து ஹசரங்கா தனது மனைவியுடன் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

News Bird

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை- தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

news

Leave a Comment

G-BC3G48KTZ0