March 24, 2025
இலங்கை

மூன்று பிரதேசங்களுக்கு விசேட அதிரடிப்படை , இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்பு (வீடியோ)

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, போகஹவெல பிரதேசத்தில் உள்ளஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் உள்ள வெறிச்சோடிய வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், உரிய இராணுவசீருடைகள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

Related posts

கஜேந்திரகுமாருக்கு எதிராக சபாநாயகரிடம் மனு : சிங்களராவய

News Bird

நான்காவது மாடியிலிருந்து விழுந்து இளம் பெண் மர்ம மரணம்..!

News Bird

பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் அதிரடி சுற்றிவளைப்பில்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0