75.18 F
France
September 8, 2024
இலங்கை

குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்தி பெண்ணொருவரின் உயிரை பறித்த மூடநம்பிக்கை..!

பொலன்னறுவைதியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை, ஜம்புரேவெல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய டி.ஜி டில்மி சதுனிகா விஜேரத்ன என்ற திருமணமான இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு கருத்தரித்தல் தாமதமானதால் ஆலயமொன்றில் தங்கியிருந்து சில பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சமய வழிபாட்டு முறையிலான சிகிச்சை தொடங்கப்பட்டு முதல் நாள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது நாள் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

இதனை தொடர்ந்து பொலன்னறுவை ஜயந்திபுர பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்தரித்தல் தாமதமானதால் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு அங்கு வழங்கப்பட்ட மருந்தினைஉட்கொண்டமையினால் பெண் உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Related posts

வீதி போக்குவரத்து அபராத தொகை அதிகரிப்பு?

News Bird

கொழும்பு துறைமுக நகரில் செயற்கை கடற்கரை..! (Port City)

News Bird

கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சியான தகவல்…!!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0