84.18 F
France
October 12, 2024
இலங்கைசர்வதேசம்

இலங்கையில் இருந்து சென்ற முத்துராஜா யானை தாய்லாந்தில் மிகவும் மகிழ்ச்சி உள்ளது..!

முத்துராஜாவுக்கு தாய்லாந்தில் அளிக்கப்படும் பராமரிப்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக முத்துராஜாவின் பிரதான பராமரிப்பாளராக இருந்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் யானைப் பாதுகாவலர் உபுல் ஜயரத்ன ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

யானைக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டதால் முத்துராஜாவுக்கு தாய்லாந்து பயணம் எளிதாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

தாய்லாந்து மன்னரை சந்திக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டு, அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

முத்துராஜா, தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த போது யானையை நன்றாக பராமரித்து, உரிய நேரத்தில் மருந்து மற்றும் உணவு வழங்கியதாகவும், தற்போது யானை குணமடைந்துள்ளதால் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

முத்துராஜாவின் உடல்நிலை குறித்த முழு அறிக்கையையும் அந்நாட்டு யானைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.

தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா யானை தற்போது லம்பாங் யானைகள் பாதுகாப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

முத்துராஜா யானையின் உடல்நிலை குறித்து நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வு அறிக்கைகளை மையம் அறிவித்துள்ளது.

மருத்துவ அறிக்கையின்படி, முத்து ராஜா யானைக்கு எந்தவிதமான உடல் நலக்குறைவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

யானைகளுக்கு பொதுவாக ஆறு முக்கிய நோய்கள் ஏற்படுவதுடன், யானையின் இரத்த மாதிரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் முத்துராஜாவுக்கு அந்த நோய் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

முத்துராஜா ஒரு நாளைக்கு 120 முதல் 200 கிலோ வரையிலான புற்கள் மற்றும் பழங்களை சாப்பிடுவதாகவும், முத்துராஜா ஒரு நாளைக்கு இரண்டு – மூன்று மணி நேரம் தூங்குவதாகவும் லாம்பாங் காட்டு யானைகள் பாதுகாப்பு மையம் தெரிவிக்கின்றது.

முத்துராஜா தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு இன்று (11) பத்து நாட்கள் கடந்துள்ள நிலையில், தாய்லாந்து யானைக் காவலர்களுக்கு முத்துராஜா பணிந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இந்திய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

News Bird

12 வயது சிறுமியின் அதிா்ச்சிகர செயல்

News Bird

இலங்கை ரூபாய் 30 கோடி சொத்து வைத்துள்ள உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர்!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0