76.98 F
France
July 27, 2024
இலங்கை

மீண்டும் திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமைக்கு..!

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாதாந்தம் 13 இலட்சம் பக்கெட்கள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கூறினார்.

2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37 இலட்சம் திரிபோஷ பக்கெட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாதாந்தம் தேவைப்படும் திரிபோஷவை உற்பத்தி செய்வதற்காக 15 மெட்ரிக் தொன் கிலோகிராம் அளவிலான சோளம் அவசியமாக உள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன கூறினார்.

இந்த தொகையை உள்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக அவை இந்தியாவில் இருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

கர்ப்பிணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் மற்றும் 3 வயதிற்கு அதிகமான குழந்தைகள் ஆகியோருக்கு மாத்திரமே தற்போது திரிபோஷ வழங்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை அடித்த யோகம் – கடந்த மாதம் இத்தனை சுற்றுலா பயணிகளா..?

News Bird

Breaking :- அதிரடியாக குறைகிறது பாணின் விலை

News Bird

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும்…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0