82.38 F
France
December 11, 2024
இலங்கை

யாழ்பாணத்தில் மரண வாக்குமூலம் ​அளிக்க பொலிஸ் நிலையம் சென்றவர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த 31வயதுடைய ​  இளைஞன் புதன்கிழமை(12)  இரவு தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் , இளைஞன் தங்கியிருந்த வீட்டின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்த வயோதிப பெண்மணியை வாக்குமூலம் வழங்க வருமாறு வியாழக்கிழமை (13 )  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்திருந்தனர்

அதன் அடிப்படையில் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையம் சென்றிருந்த பெண்மணி , திடீர் சுகவீனமுற்று பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து நோயாளர் காவு வண்டி மூலம் பெண்மணியை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது , பெண்மணி உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

மரண விசாரணைகளின் போது  75 வயதுடைய  வயோதிப பெண்மணியின் உறவினர்கள் கொழும்பில் வசித்து வருவதாகவும் , யாழ்ப்பாணத்தில் அவர்  தனியாகவே வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை உயிர்மாய்த்த இளைஞன் கடந்த சில தினங்களாக மனவிரக்தியில் காணப்பட்டதாக வயோதிப பெண்மணி பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் அவர்  இளைஞனின் உயிர் இழப்பில் கவலையில் இருந்ததாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்..! கொழும்பில் பதிவான அதிர்ச்சி சம்பவம்

News Bird

ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இ.தொ.கா தீர்மானம்!

News Bird

இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை சுவீகரித்த தருஷி

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0