March 24, 2025
இலங்கை

மலையகத்தில் தேயிலை மலைக்கிடையில் சிறுத்தை குட்டிகள்..!

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் இன்று (17) காலை இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று (17) காலை குறித்த தோட்டத்தில் 4ம் இலக்க மலையில் பணி செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் குறித்த இடத்திலுள்ள தேயிலை செடிகளின் நடுவில் சிறுத்தை குட்டிகள் இருப்பதை கண்டு தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தல் வழங்கியதன் பின்னர் நல்லத்தண்ணி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டது

குறித்த விடயம் சம்பந்தமாக துரிதமாக விரைந்த வன ஜீவராசிகள் அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளை பார்வையிட்டதுடன் அதன் தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

மாணவனை தாக்கிய அதிபா் கைது!

News Bird

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வருகை..!

News Bird

இலங்கையில் Online கடவுச்சீட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0