78.78 F
France
September 12, 2024
சர்வதேசம்

விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் உயிரிழப்பு….!

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ரொட்டிகோ கட்சியின் உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.

அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் சிறியரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.

விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காக சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தில் அரசியல்வாதிகளுடன் விமானியும் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்துக்கு இடதுசாரி கட்சி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related posts

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதா..?

News Bird

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி

news

Paris Shooting: At least 150 arrested after protests in France over fatal police shooting (Video)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0