82.38 F
France
December 11, 2024
விளையாட்டு

16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று

மழை காரணமாக கைவிடப்பட்ட 16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

நேற்றைய இறுதிப் போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று மதியம் போட்டி தொடங்குவதாக இருந்தது, ஆனால் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.

முன்னதாக நேற்றிரவு 9.40 மணியளவில் போட்டியை ஆரம்பிக்க முடியுமாயின் 20 ஓவர்கள் விளையாட முடியும் என்றும் போட்டி மேலும் தாமதமானால் ஓவர்கள் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேநேரம், நள்ளிரவு 12.06க்கு முன்னதாக போட்டி ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டால், குறித்த போட்டி, 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிபிடத்தக்கது.

Related posts

ஆசிய கிண்ண டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு.!

News Bird

சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்த Jaffna Kings

News Bird

LPL 2023 ஏலம் – அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0