80.58 F
France
January 19, 2025
இந்தியா

ஒடிசாவில் பலியானது 50 பேராக இருக்காது.. சடலங்கள் அதிகமாக சிதறி கிடக்கிறது!

ஒடிஷா மாநிலத்தில் பஹாநாஹா பஜார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் துரந்தோ ரயிலும் அடுத்தடுத்து மோதியதில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சடலங்கள் அதிகம் காணப்படுவதாக விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணி ஒருவர் கூறியுள்ளார்.

சென்னையில் 044-25330952, 044-25330953, 25354771என்கிற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் 350க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் மேலும் அதிர்ச்சி தரும் சம்பவமாக தடம் புரண்ட சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதை போல் டெல்லியில் இருந்து புனே சென்று கொண்டிருந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தொடர் விபத்துகள் காரணமாக ஓடிசா மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பயணி வெங்கடேசன் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு வீடியோ மூலம் தகவல் அளித்துள்ளார். கோரமண்டல் ரயிலில் சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்கு பாலசோர் வந்தது. அங்கிருந்து ரயில் கிளம்பி சில நிமிடங்களில் எதிர் பக்கமாக துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலும் டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. அதற்கு பக்கத்திலேயே கூட்ஸ் வண்டியும் வந்து கொண்டிருந்தது. இரண்டு பயணிகள் ரயிலுக்கு இடையே கூட்ஸ் ரயில் புகுந்த காரணத்தால் ஆக்ஸிடென்ட் ஆகிவிட்டது.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பி 7 கோச்சில் நான் இருந்தேன்.பி 6 வரைக்கும் விபத்தில் சிக்கியுள்ளது. பொது பெட்டியில் இருந்த பயணிகள் அதிகம் உயிரிழந்து விட்டனர். டெட் பாடிகள் அதிகம் உள்ளன என்றும் விபத்தில் உயிர் தப்பிய வெங்கடேசன் கூறியுள்ளார். நான் எங்கள் டீம் பட்டாலியனுக்கு போன் செய்து கூறியுள்ளேன். விடியும் பணி மீட்பு பணி நடைபெறும். இரண்டு நாட்கள் வரைக்கும் மீட்புப்பணி நீடிக்கும் என்றும் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சரக்கு ரயில் பெட்டியின் மீது பயணிகள் ரயில் பெட்டி ஏறியுள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் செய்யக்கூடிய அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த பயணிகளுக்கு தேவையான உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 3 ரயில்கள் நேருக்கு நேர் மோதுவதற்கு காரணம் என்ன என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

 

Related posts

288 உயிர்களை பலி தீர்த்த ஒடிசா ரயில் விபத்து

News Bird

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார்

News Bird

BREAKING NEWS :- டைட்டானில் சென்ற அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0