82.38 F
France
December 11, 2024
இந்தியாஇலங்கை

இறந்த நிலையில் கரையொதுங்கிய கடற் பசு (படங்கள்)

மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் கடற்பசு ஒன்று நேற்று (22) கரையொதுங்கியுள்ளது.

இராமநாதபுரம் – பாம்பனுக்கு அருகில் உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள தோனித்துறை கடற்கரையில் இந்த கடற்பசு கரையொதுங்கியுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக இராமேஸ்வரம் வனவள திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய இந்த கடற்பசு சுமார் 8 வயது மதிக்கத்தக்கது என்பதுடன், 1500 கிலோகிராம் எடை கொண்டதாக இருக்கலாம் என இராமேஸ்வர வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரிசோதனையின் பின்னர் கடற்பசுவை கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Related posts

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

News Bird

நுவரெலியாவில் கத்தி குத்து : தானாகவே சரணடைந்த குற்றவாளி (வீடியோ)

News Bird

இலங்கைக்கு மீண்டும் முத்துராஜா யானையை அனுப்ப மாட்டோம் : தாய்லாந்து அதிரடி

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0