January 18, 2025
இலங்கைசர்வதேசம்

22 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் இருந்து தாய்லாந்து செல்ல விமான நிலையம் வந்த முத்துராஜா யானை! (VIDEO)

தாய்லாந்தில் இருந்து அன்பளிப்பாக பெறப்பட்ட “சக்சுரின்” அல்லது “முத்துராஜா” என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

யானையை ஏற்றிய விமானம் இன்று காலை 07.30 மணியளவில் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

தாய்லாந்தில் இருந்து வந்த விசேட விமானம் மூலம் யானை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.

தாய்லாந்தில் யானைக்கு அந்நாட்டு கால்நடை வைத்தியர்களால் சிறப்பு சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தில் இருந்து இந்நாட்டிற்கு வந்த மூன்று கால்நடை வைத்தியர்கள், ஒரு யானைப் பண்ணையாளர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த விமானத்திற்காக தயாரிக்கப்பட்ட விசேட கூண்டுடன் பழகுவதற்கு “முத்துராஜா” யானைக்கு சுமார் ஒரு மாத காலம் பயிற்சியளிக்கப்பட்டதாகவும்  திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.

2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கம் “சக்சுரீன்” என்ற யானையை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால் இந்த யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அதனை தாய்லாந்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் அதிரடி பேச்சு

News Bird

இலங்கையில் “சிசேரியன்” மருந்து தட்டுப்பாட்டுக்கு பணப்பற்றாக்குறை காரணமா..?

News Bird

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0