84.18 F
France
April 19, 2025
இலங்கை

இலங்கையில் நிலநடுக்க அபாயம்…!

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் அதுல சேனாரத்ன அடையாளம் கண்டுள்ளார்.

ஆனால் சாத்தியமான அதிர்ச்சிகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை தொடக்கம் உஸ்ஸங்கொடை வரையிலான செயலற்ற டெக்டோனிக் எல்லை, மத்திய மலையகத்தைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கம் தொடர்பான பகுதிகள் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு சுனாமி ஆபத்து ஏற்பட்டால் அது சுமாத்ராவின் முனையில் நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

ஆனால் அண்மைக்காலமாக அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்த Jaffna Kings

News Bird

இன்று இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..…!

News Bird

இலகுரக ஆயுதங்களுக்கான துப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0