80.58 F
France
June 24, 2025
இந்தியாஇலங்கைசர்வதேசம்

ட்விட்டருக்கு வந்த சோதனை | ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனம் ட்விட்டர் செயலியை போன்று புதிய செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

எதிர்வரும் வியாழன் அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் Threads எனும் செயலி, வார்த்தை அடிப்படையிலான உரையாடல் செயலியாகும்.

பல ஆண்டுகளாக ட்விட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை பெரும்பணக்காரரான எலன் மாஸ்க் வாங்கினார்.

சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று ட்விட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும், தேவையற்ற பதிவுகளை குறைக்கவும், தரவுகள் வீணாவதை குறைக்கும் வகையிலும் ட்விட்டர் பதிவுகளை பார்க்க எலன் மாஸ்க் அண்மையில் கட்டுப்பாடுகளை விதித்து வந்தார்.

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ட்விட்டரின் உரிமையாளரான எலான் மாஸ்க்கிற்கும் இடையேயான கருத்து மோதலுக்கு மத்தியில் Threads செயலி அறிமுகம் செய்யப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்

News Bird

இரத்தக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்பு

News Bird

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் 193 திருத்தங்களுடன் நிறைவேற்றம்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0