84.18 F
France
February 7, 2025
இலங்கை

திரிபோஷா இல்லை குழந்தைகளுக்கு முட்டை வழங்குமாறு கோரிக்கை.!

திரிபோஷா உற்பத்தி மீண்டும் தொடங்கும் வரை, ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு மாற்று உணவாக முட்டை அல்லது பிற தானியங்களை வழங்குமாறு அரசாங்கத்தின் குடும்ப நலச் சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோருகிறது.

ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவது சுமார் ஒரு வருட காலமாக முடங்கியுள்ளதாக சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான திரிபோஷா தயாரிப்பதற்கு ஏற்ற சோளத்தை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், திரிபோஷ தயாரிக்க முடியாது என திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் கிடைக்கும் மக்காச்சோளத்தின் கையிருப்பு சிறுவர்களுக்கு திரிபோஷா பெறுவதற்கு ஏற்ற தரத்தில் இல்லை என்றும் நிறுவனம் குறிப்பிடுகிறது.U

Related posts

வரலாற்றில் தடம் பதித்த இலங்கை மகளிர் அணி தலைவி சமரி அத்தபத்து!

News Bird

இலங்கை சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாகிரகம்..(வீடியோ)

News Bird

கொலை வழக்கில் உயர் நீதிமன்றில் விளக்கமளித்த மைத்திரி..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0