78.78 F
France
September 12, 2024
இலங்கைவிளையாட்டு

8 விக்கெட்டுக்களால் இலங்கை அணி அபார வெற்றி..!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இன்று (07) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

2023 ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று சிம்பாப்வேயில் இந்த நாட்களில் நடைபெற்று வருகிறது.

அதன் ஆரம்ப சுற்றில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை அடைந்ததன் மூலம் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது.

சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை எதிர்கொள்ளும் இறுதிப் போட்டி இன்று (07) இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானகா, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப்பை முதலில் துடுப்பெடுத்தாட  அழைத்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களை இழந்து 243 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Keacy Carty அதிகபட்சமாக 87 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சாா்பில் மஹீஸ் தீக்சன 04 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 244 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, பதிலுக்கு களம் இறங்கிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் பெதும் நிஸ்ஸங்க 113 பந்துகளில் 14 நான்கு ஓட்டங்களுடன் 104 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

Related posts

மலையகத்தில் தேயிலை மலைக்கிடையில் சிறுத்தை குட்டிகள்..!

News Bird

மனைவியின் முன்னால் கணவனின் மகளை துஷ்பிரயோகப்படுத்திய செய்த இன்னால் கணவர்.!

News Bird

அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0