78.78 F
France
September 8, 2024
இலங்கை

நுவரெலியாவில் கத்தி குத்து : தானாகவே சரணடைந்த குற்றவாளி (வீடியோ)

நுவரெலியா பிரதான நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நுவரெலியா பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என்ற நபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்திய பழங்கள் விற்கும் வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  • “நுவரெலியா செ.திவாகரன்”

Related posts

நான்காவது மாடியிலிருந்து விழுந்து இளம் பெண் மர்ம மரணம்..!

News Bird

வெளியானது அஸ்வெசும நலன்புரி திட்ட பட்டியல்.!

News Bird

கொழும்பு வரும் ரயில் சேவைகள் பாதிப்பு..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0