January 18, 2025
இந்தியாஇலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்கிறார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார்.

அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதி பணிமனை பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோரும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது பல துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்பதும் விசேட அம்சமாகும்.

இதற்கிடையில், இந்திய வெளியுறவு செயலாளர் திரு.வினய் மோகன் குவாத்ரா இந்த வாரம் இந்த நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்திற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார செயலாளர் தீவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

இலங்கை தேசிய கீதம் சர்ச்சையில் சிக்கிய உமாரா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்..!

News Bird

சிசுவின் சடலத்தில் குழப்பம் : மரபணு சோதனைக்கு பெற்றோர் மறுப்பு

News Bird

Zee Tamil சரிகமபா* பாடல் போட்டியில் இலங்கையில் இருந்து ஒரு இளங்குயில் கூவுகிறது (VIDEO)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0