January 18, 2025
இலங்கை

காலிக்கு அருகில் மீன்பிடி படகு தீ விபத்து : கடற்படையினர் அதிரடி..!

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் “சசிந்த புதா” என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் படகும் மோதி விபத்து ஏற்பட்டது.

இதன்போது அந்த வௌிநாட்டு படகில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் நெடுநாள் படகில் இருந்த மீனவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைக்கு அறிவித்துள்ளது.

இதன்படி, கடற்படையின் “ஸ்பார் மிரா” என்ற வணிகக் கப்பல் ஊடாக தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Related posts

பிரபல மலையக ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் அதிரடியாக கைது.!

News Bird

கொழும்பு துறைமுக நகரில் செயற்கை கடற்கரை..! (Port City)

News Bird

வடக்கு கிழக்கு மாகண மக்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0