March 24, 2025
சர்வதேசம்

மார்பகத்துக்குள் 5 பாம்புகளுடன் கைதான பெண்..!

தன்னுடைய இரண்டு மார்பகங்களுக்குள் ஐந்து பாம்புகளை மறைத்துவைத்து கடத்துவதற்கு முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபுக்சியன் துறைமுகத்தில் இருந்து ஹொங்கொங்குக்கு செல்ல முயன்ற போதே ஷென்சென் சுங்க அதிகாரிகளால் அப்பெண் கைது செய்யப்பட்டார்.

ஃபுக்சியன் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் நுழையும் போது பெண்ணொருவர் வினோதமான உடல் வடிவத்துடன் இருப்பது சுங்க அதிகாரிகளின் கண்களுக்குத் தென்பட்டது.

அவரது அசாதாரண உடல் வடிவம் காரணமாக, சுங்க அதிகாரிகள் அந்த பெண்ணை சோதனையிட்டபோது, ​​​​அவரது மார்பில் 5 உயிருள்ள பாம்புகள் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

குறித்த பெண்ணின் அடையாளம் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஐந்து பாம்புகளையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதா..?

News Bird

நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்கம் ..!

News Bird

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்

news

Leave a Comment

G-BC3G48KTZ0