76.98 F
France
July 27, 2024
இலங்கை

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்?

கோதுமை மாவின் விலை குறைந்துள்ள போதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான சாத்தியம் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அனைத்து வகையான கோதுமை மா விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்தது.

அதற்கமைய, பாண் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

எனினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட்டதால் அவற்றின் விலைகளை மீண்டும் குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

மற்றும் ஓர் நிவாரணம்….!

News Bird

பூண்டுலோயாவில் 26 பேர் பயணித்த பேருந்து விபத்து..! (PHOTOS)

News Bird

இலங்கையில் இருந்து Bigg Boss 2023’க்கு சொல்லும் பிரபலம் யார் தெரியுமா.?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0