78.78 F
France
September 8, 2024
இலங்கை

பூண்டுலோயாவில் 26 பேர் பயணித்த பேருந்து விபத்து..! (PHOTOS)

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் இன்று (09) மாலை 3.30 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன், இதில் காயமடைந்த 21 பேர் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக 6 பேர் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், மூன்று பேர் பூண்டுலோயா மல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயா வேவஹேன பிரதேசத்தில் இருந்து வட்டகொட தோட்டத்திற்கு பணிபுரிய சென்றவர்களே இவ்வாறு பணியை முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய போது இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

News Bird

இலங்கையில் தமிழ் மக்களுக்காக 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கவுள்ள ரயில்..!

News Bird

யாழ்பாணத்தில் கடன் பிரச்சினையால் 40 வயதுடைய உயிரிழந்த குடும்பஸ்தர்!!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0