82.38 F
France
February 22, 2025
இந்தியாஇலங்கைசினிமா

இளைய தளபதி விஜயின் லியோ படக்குழு வெளியீட்ட பிரமாண்டமான தகவள்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘லியோ’ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற செப்டம்பர் மாதம் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வீதி போக்குவரத்து அபராத தொகை அதிகரிப்பு?

News Bird

பதுளையில் இருந்து கொழும்பு சென்ற பஸ் விபத்து : 15 பேர் வைத்தியசாலையில் (CCTV VIDEO)

News Bird

‘மலையகம் – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0