82.38 F
France
December 11, 2024
இலங்கை

இலங்கையில் அதிகரித்த கைத்தொலைபேசி பாவனை : மனநோயாளர்களாக மாறும் சிறுவர்கள்

கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளதால்இவ்விடயத்தில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்த வேண்டுமென கல்முனை அஸ்ஸுஹராவித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் கைத்தொலைபேசிப் பாவனையால் எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன்எதையும் சிந்திக்காத மனநோயாளர்களாக உலாவிக் திரியும் நிலைமை தோன்றும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தேவைக்கு கைத்தொலைபேசிகளை பயன்படுத்த நாம் அனைவரும் ஒன்றினைத்து சமூகப்பொறுப்புள்ளநற்பிரஜையாக மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப்பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது. அன்றாட ஊடக செய்திகளில் கைத்தொலைபேசி குற்றங்கள் அதிகரிப்பு என்ற செய்தியே இடம்பிடித்துள்ளது.

இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்துங்கள். இன்று நாம் வாழும் உலகம் முழுவதும்கைத்தொலைபேசி பாவனைக்குள் உள்வாங்கப்பட்டு விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாம் எதைச் செய்வதென்றாலும் எம் தேடல் கைத்தொலைபேசியில் தங்கி உள்ளது. இப் பழக்கம் தற்போதுசிறுவர் முதல் முதியோர்வரையும் ஆட்கொண்டு விட்டது.

இதனால் அனைவரதும் சிந்திக்கும் ஆற்றல் வாசிப்புத்திறன் புதுமைகள் படைக்கும் திறன் என பல திறன்களைசெய்யமுடியாமல் ரோபோக்கள் போல் இயங்குகின்றனர்.

ஆன்மீகம் இல்லாமல் போகின்றது. நல்லொழுக்கம் விழுமியம் குறைவடைகின்றது. எதையும் சிந்திக்காதமனநோயாளர்களாக உலாவிக் திரியும் நிலைமை தோன்றும் என கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலய அதிபர்எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா தெரிவித்துள்ளார்.

Related posts

அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில்

News Bird

ஜப்பானில் இருந்த 195 பேருடன் இலங்கை வந்த கப்பல்..!

News Bird

பழுதடைந்த உணவை உண்ணக்கூறி பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0