80.58 F
France
November 9, 2024
இலங்கை

820,000 ரூபா பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி

வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்று தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவியையும் ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பினை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து 820,000 ரூபா பணத்தினை மோசடி செய்தமை தொடர்பில் ரம்புக்கனை பொலிஸாருக்கு கிடைத்த 6 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி நேற்று (13) இரவு கேகாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 வயதுடைய ரம்புக்கனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், இதே போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நபர்களை ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களுக்கு எதிராக 46 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த இருவரின் மோசடிகளில் வேறு யாரும் சிக்கியிருந்தால் அருகில் உள்ள பொலுஸ் நிலையத்தில் முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

மனுஷ மற்று்ம் ஹரினின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது!

News Bird

கடன் மறுசீரமைப்பு குறித்து ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு

Ceylonguardian

முல்லைத்தீவில் பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு : விசேட அதிரடிபடை…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0