85.98 F
France
May 19, 2024
இந்தியாஇலங்கை

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷடம்..…!

சோபகிருது வருடம் ஆடி மாதம் 08 ஆம் தேதி திங்கட்கிழமை 24.7.2023,சந்திர பகவான் இன்று கன்னிராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 07.45 மணி வரை அஸ்தம். பின்னர் சித்திரை. இன்று மாலை 06.06 மணி வரை உத்திரம். பின்னர் அஸ்தம். பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குசந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம்

காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை அடைய மாட்டீர்கள். கட்டுமானத் துறையில் புதியகாண்ட்ராக்ட்களை பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அவசரம் காட்டாதீர்கள். பங்குச் சந்தைவியாபாரத்தில் பாதகமான நிலையை சந்திப்பீர்கள். உறவினர்களின் சூழ்ச்சியை புத்திசாலித்தனமாகமுறியடிப்பீர்கள்.

ரிஷபம்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை செய்வீர்கள். தகுந்த நேரத்தில் தாய்மாமன்உதவியை பெறுவீர்கள். காதலியுடன் வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். தனியார் துறையில் விடுமுறைகிடைக்காமல் தடுமாறுவீர்கள். தொழிலும் வியாபாரமும் சிறப்பாக நடந்து மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்கள்மத்தியில் உங்கள் மரியாதை அதிகரிப்பீர்கள்.

மிதுனம்

விளையாட்டாக வாங்கிப்போட்ட நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். புதிய ஆர்டர்கள் மூலம் நல்ல கமிஷன்பெறுவீர்கள். நீங்கள் கேட்ட பொருளை வெளிநாட்டில் இருந்து உங்கள் நண்பர் மூலம் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எல்ஐசி பாலிசி எடுப்பீர்கள். சம்பள உயர்வு பெறுவீர்கள். வேலை செய்யும்இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.

கடகம்

பகல் இரவு பார்க்காமல் குடும்பத்திற்குப் பாடுபடுவீர்கள். மனைவி எடுத்தெறிந்து பேசுவதால் மனம்துன்பப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை பாகப்பிரிவினை செய்யும்படி சகோதரரால் வற்புறுத்தப்படுவீர்கள். தேவையில்லாமல் பேசி ஊர்ப் பகையை இழுக்காதீர்கள். வார்த்தைக்கு கட்டுப்பட மறுக்கும் பிள்ளைகளால்கவலைப்படுவீர்கள்.

சிம்மம்

வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். இடம் வாங்கி மாற்றி விடுவதன் மூலம் இருமடங்குலாபம் பார்ப்பீர்கள். உழைப்பால் உயரதிகாரிகளின் மனதைக் குளிர வைப்பீர்கள். ஆசைப்பட்ட நகைகளைப்பெண்கள் வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்க பதிவு செய்வீர்கள். ஐடி துறை ஊழியர்கள் அபார வளர்ச்சிஅடைந்து வருமானத்தை பெருக்குவீர்கள்.

கன்னி

வயிற்றுக் கோளாறால் பயணத்தை தள்ளிப் போடுவீர்கள். வியாபாரத்திற்காக வெளிநாடு செல்லதிட்டமிடுவீர்கள். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் கைக்கு வரதாமதமாவதால் வீட்டு வேலையில் சுணக்கத்தை காண்பீர்கள். சகோதரர் திருமணத்திற்கு பண உதவிசெய்வீர்கள். வேலைப்பளு காரணமாக ஐடி ஊழியர்கள் டென்ஷன் ஆவீர்கள்.

துலாம்

அடுத்தவரின் ஆலோசனையைக் கேட்டு அவசரப்பட்டு காரியத்தில் இறங்கினால் அவஸ்தைப்படுவீர்கள் . ஆன்லைன் விளையாட்டுகளில் உள்ள ஆபத்தை உணர்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்ஏமாற்றப்படுவீர்கள். வாங்கிய கடனைக் கொடுக்காவிட்டால் அவமானத்தைச் சந்திப்பீர்கள். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் போது கவனத்தை சிதற விடாதீர்கள்.

விருச்சிகம்

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தாய்வழிச் சொத்தை விற்பனை செய்வீர்கள். உங்களுக்கு உரிய பங்குகைக்கு வந்து வீட்டு வேலைகளை முடிப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவி பெறுவீர்கள். மருத்துவர்கள், இன்ஜினியர்கள் அதிக லாபம் அடைவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். கையிருப்பை உயர்த்துவீர்கள்.

தனுசு

புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடு செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத லாபம் தேடுவீர்கள். வியாபாரப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். ஐடி ஊழியர்கள் வருமானம் அதிகரித்து மகிழ்ச்சி அடைவீர்கள். காதலி கேட்ட நகையை வாங்கி கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள். கோயில் திருப்பணிக்கு பண உதவிசெய்து அந்தஸ்தை அதிகரிப்பீர்கள்.

மகரம்

நாக்கும் வாக்கும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். ஆத்திரப்பட்டுப்பேசி உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவீர்கள். தகப்பனாருக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள். வெளியூர்ப்பயணங்களால் அதிக பயன் அடைய மாட்டீர்கள். சகோதர சகோதரிகளுக்காக விரயச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் சற்று சறுக்களை சந்திப்பீர்கள்

கும்பம்

எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்கலை எதிர்நோக்குவீர்கள். வெயிலின் கொடுமையால் உடல்நிலையில்பாதிப்பு அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் கடுமையாகப்பணியாற்றுவீர்கள். முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். உங்களின் ஆத்திரத்தை குடும்பத்தில்காட்டாதீர்கள். சந்திராஷ்டமம் நாள்.எச்சரிக்கை தேவை.

மீனம்

வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்குவீர்கள். பழைய பாக்கிகளை சிரமப்பட்டு வசூல்செய்வீர்கள். வியாபார மந்த நிலையால் கவலைப்படுவீர்கள். பைனான்ஸ் தொழிலில் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள். ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றால் பணியை இழப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளைப்பகைத்துக் கொள்ளாதீர்கள் .

Related posts

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 6000 பேர் தொழிலை இழக்கும் அபாயம்!

News Bird

கொரோணாக்கு பிறகு மீண்டும் இலங்கை வந்த Air China விமானம்..!!

News Bird

அதிகமாக பகிருங்கள் : நாய்க்குட்டிகளுக்கு இனங்காணப்படாத வைரஸ் பரவல்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0