82.38 F
France
December 11, 2024
இலங்கை

இலங்கை தேசிய கீதம் சர்ச்சையில் சிக்கிய உமாரா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்..!

இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடக்க விழாவில் தான் பாடிய தேசிய கீதம் குறித்து பாடகி உமாராசின்ஹவன்ச தனது முகநூல் கணக்கில் இவ்வாறானதொரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

தன்னால் பாடிய தேசிய கீதத்தின் சில வார்த்தைகளை உச்சரிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தனதுகவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர் என்ற வகையில் இலங்கையின் கொடியை மிகவும் பெருமையுடன் தான் உயர்த்தியுள்ளதாகவும், தாய்நாட்டை நேசிக்கும் பாடகியாக தாம் நாட்டின் பெருமையை எக்காலத்திலும் உயர்த்துவதற்காக பல்வேறுவழிகளில் உழைத்துள்ளதாகவும் உமாரா சிங்ஹவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தின் வார்த்தைகளை திரிபுபடுத்தவோ அல்லது எந்தவிதமான விளக்கத்தை வழங்கவோ தான்ஒருபோதும் முயற்சிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், பாடகி உமாரா சின்ஹவன்ச தனது முகநூல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மக்களின்உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும், தான் பாடியதால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லதுபுண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

எவ்வாறாயினும், தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவசரவிசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குற்றப்புலனாய்வுதிணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அமைச்சுஅறிவித்துள்ளது.

அமைச்சர் மட்டத்தில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்கஅமைச்சர் அசோக் பிரியந்த டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்ஹவன்ச இன்றுபொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்க அழைக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரபல நடிகை பூர்விகா வெளியிட்ட புகைப்படங்கள் (படங்கள் உள்ளே)

News Bird

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான சலூன்களை மூடுமாறு தலிபான்கள் உத்தரவு!

News Bird

நாட்டில் தற்போது நிலவும் மழை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கக் கூடிய சாத்தியம்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0