ஜூன் மாத இறுதிக்குள் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நாட்டில் டெங்கு மற்றும் கொவிட் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அமைச்சர்கள் குழுவொன்றும் நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் பரவிவரும் டெங்கு மற்றும் கொவிட் 19 நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அமைச்சரவை குழுவொன்றை நியமித்துள்ளார்.
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டதுடன், நாட்டில் டெங்கு கட்டுப்பாட்டு பொறிமுறையானது உரிய முறையில் செயற்படுகின்ற போதிலும், மாகாண மட்டத்தில் மக்களை தெளிவுபடுத்துவதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்றின் அவசியம் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது