March 13, 2025
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்..! (வீடியோ)

News Bird

“இலங்கை கிரிக்கெட் பணம் வீணடித்ததை நிரூபித்தால் நாளையே நான் பதவி விலகுவேன்” (வீடியோ)

News Bird

Tiktok நிருவனத்தின் அதிரடி மற்றம்…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0