78.78 F
France
January 18, 2025
இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தொடா்பில் அதிரடியான புதிய தீா்மானம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

தனியாரிடம் இருந்து சுமார் 8 லட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தில் உள்ள அச்சுப்பொறிகளின் திறன் போதிய அளவில் இல்லாததால் சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதில் பல மாதங்களாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளாா்.

சுமார் 20 கோடி ரூபாவை செலவிட்டு புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனத்திடம் இருந்து அட்டையை அச்சிட்டு பெற்று ஒரு அட்டைக்கும் 150 ரூபா வீதம் செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பதினைந்து வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த அரசாங்க உத்தியோகத்தர் கைது..!

News Bird

மன்னார் பெண்ணின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை – சுகாதர அமைச்சர்

News Bird

கொழும்பு பம்பலபிட்டியில் பிரபல அரசியல்வாதி மகனிடம் கொள்ளை

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0