75.18 F
France
July 27, 2024
இலங்கை

அதிகமாக பகிருங்கள் : நாய்க்குட்டிகளுக்கு இனங்காணப்படாத வைரஸ் பரவல்

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு பரவியதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த நோயின் பரவலாக பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைத் தவிர கண்டி, கம்பளை, ஹட்டன், பேராதனை, கினிகத்தேன ஆகிய பிரதேசங்களிலும் இந்நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் எட்டு மாதங்களுக்கும் குறைவான நாய்க் குட்டிகளுக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட நாய்க் குட்டிகள் சுவாசக் கோளாறுகள் (சுவாசப் பிரச்சினைகள்), வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகளின் நிறமாற்றம், பசியின்மை மற்றும் சோம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ் மற்றும் லெப்ரடார்ஸ் போன்ற கலப்பு இன நாய்களிடையே இந்த தொற்று பரவுவது கண்டறியப்பட்டது.

எனவே நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிகளுக்கு உறைந்த உணவுகளை ஊட்டுவதை தவிர்க்குமாறும் 4 அல்லது 5 மாதங்களுக்கு குளிப்பதை தவிர்க்குமாறும் வைத்தியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கூறிய பகுதிகளில் நீண்ட காலமாக இந்த வைரஸ் தொற்று பரவி வந்த நிலையில், தற்போது இந்த வைரஸின் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டில் தற்போது நிலவும் மழை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கக் கூடிய சாத்தியம்..!

News Bird

வடக்கு கிழக்கு மாகண மக்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு

News Bird

யாழ்பாணத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0