78.78 F
France
September 8, 2024
இந்தியாசினிமா

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் விஜய்?

தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை இன்று நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கவுள்ளார்.

தமிழ்நாடு சினிமா துறையில் முக்கிய நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இவர் நடித்து வரும் லியோ திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனிடையே, நடிகர் விஜய் அவ்வப்போது அரசியல் ரீதியிலான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

அதேபோல், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார். இந்த இயக்கம் மூலம் சமீப காலமாக பல்வேறு செயல்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சூழ்நிலையில், அரசியல் களத்தில் குதிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகளையும் நடிகர் விஜய் எடுத்து வருகிறார்.

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்.

சென்னை நீலாங்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார்.

Related posts

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

Editor

இன்று இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..…!

News Bird

ஆபாச மெசேஜ்கள் அனுப்பும் கணவன் : இரவோடு இரவாக காவல் நிலையம் சென்ற பிக்பாஸ் ரக்சிதா

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0