யாழ்ப்பாணத்தில் நாய்க்குட்டிகளை கொடூரமாக கொலை செய்த நபரை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் நபர் ஒருவர் 7 நாயக்குட்டிகளை கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரை உடன் கைது செய்யுமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சாவகச்சேரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்ய நடவடிக்கை
இரவு நேரத்தில் தனது உறக்கத்திற்கு தொந்தரவாக இருந்த நாய்க்குட்டிகளை குழியொன்றில் தீ மூட்டி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.