March 24, 2025
இலங்கைசர்வதேசம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் பெண் மீது பௌத்த விகாரையில் பாலியல் வன்புணர்வு முயற்சி!

ஹபராதுவ பௌத்த விகாரை ஒன்றில் உக்ரைனிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், புதன்கிழமை (21) குறித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விகாரைக்கு வழிபட

உனவடுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் குறித்த சுற்றுலாப் பயணி ஹபராதுவ பௌத்த விகாரைக்கு வழமையாக செல்வதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் போதி மரத்தை வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணை அணுகி ஆலயத்தின் மற்றுமொரு பகுதியை வழிபடுமாறு அழைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல்

சந்தேகநபரின் அழைப்பின் பேரில் குறித்த பிரதேசத்தை வழிபட்ட பெண் அங்கிருந்து வெளியேறும் போது அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

Related posts

நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்கம் ..!

News Bird

இலங்கையில் அதிகரித்த கைத்தொலைபேசி பாவனை : மனநோயாளர்களாக மாறும் சிறுவர்கள்

News Bird

முல்லைத்தீவில் பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு : விசேட அதிரடிபடை…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0