80.58 F
France
June 24, 2025
இலங்கை

சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்..! கொழும்பில் பதிவான அதிர்ச்சி சம்பவம்

கொழும்பு- கொலன்னாவைப் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (23.06.2023) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சுப்பிரமணியம் தயாபரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொடுக்கல் – வாங்கல் விவகாரம்

இவரின் வீட்டுக்கு உந்துருளியில் முகமூடி அணிந்து வந்த இருவர், கூரிய ஆயுதத்தால் அவரைச் சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அயலவர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொடுக்கல் – வாங்கல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்துக் கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மீண்டும் எகிறிய வாகன விலை – முழுமையான விலைப்பட்டியல் உள்ளே

News Bird

மருத்துவ துறையில் உலக சாதனை படைத்த இலங்கை இராணுவம் (PHOTOS)

News Bird

கொழும்பில் தீவிரமாக டெங்கு நோய் பரவும் அபாயம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0