78.78 F
France
September 12, 2024
இந்தியாஇலங்கை

தேடிவரும் பண அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா…!


ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டுதான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.

இதன்படி, நாளை மங்கலகரமான கோபகிருது வருடம் ஆனி மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி).

நாளைய நாளுக்கான, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும்என்பதைப் பார்க்கலாம்,.

மேஷம்

நாளை மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் நாளைய நாளைஉங்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வீர்கள். விரைந்து முடிவெடுப்பீர்கள்.

பணியை மகிழ்ச்சியுடன் விரும்பிச் செய்வீர்கள். சுய வளர்ச்சியின் மூலம் பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் கடினமாக உழைப்பீர்கள்

உங்கள் கடின உழைப்பின் காரணமாக ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் வகையல் பண வரவு காணப்படும். உங்கள் பணியில் நேர்மையாக இருப்பீர்கள்.

ரிஷபம்

நாளை விருப்பமான பலன்கள் கிடைக்காது. தவறான விளைவுகள் ஏற்படாமல் இருக்க எந்த ஒரு செயலையும்செய்வதற்கு முன் யோசித்து செய்ய வேண்டும். பிறரோடு உரையாடும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.

உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் சில ஏமாற்றங்களையும் தடைகளையும் சந்திக்க நேரும். சகபணியாளர்களுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்காது.

நாளை ஏற்படும் செலவுகளை நீங்கள் தவிர்க்க முடியாது. என்றாலும் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவினங்கள் ஏற்படலாம்

மிதுனம்

நாளை தடைகள் நிறைந்து காணப்படும். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். கடினமான சூழ்நிலைஇருந்தாலும் அதனை லேசாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். வெறுமையைஉணர்வீர்கள். நாளை முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

பணியிடச்சூழல் சுமூகமாக இருக்காது. உங்கள் பணிகளை எளிதாக ஆற்றுவதில் சில தாமதங்கள் காணப்படும்.

நாளை அதிக பண வரவிற்கான வாய்ப்புகள் குறைவு. செலவுகள் குவிந்து காணப்படும். நிதி சம்பந்தமானமுக்கிய முடிவுகள் சாதகமாக இருக்காது.

கடகம்

நாளை ஆக்கபூர்வமான நாளாக இருக்கும். நண்பர்களால் பயனடைந்து மகிழ்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள்.

பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். உங்கள் சகபணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின்ஆதரவை பெறுவீர்கள். உங்கள் செயல்திறனில் மிகுந்த திருப்தி காண்பீர்கள்.

நாளை பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். பயனுள்ள சொத்துக்களை வாங்குவதில் உங்கள் பணத்தை முதலீடுசெய்வீர்கள்.

சிம்மம்

நாளை அமைதியின்மை காணப்படும். செயல்களை நன்றாக சிந்தித்து கவனமுடன் முடிவெடுத்து செய்யவேண்டும். சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணத்தை பராமரிக்க வேண்டும்.

பணியில் உங்கள் முன்னேற்றம் அதிக அளவில் காணப்படாது.பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதுஉங்களுக்கு கவலையை அளிக்கும்.

சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு. நீங்கள் எதிபார்த்த அளவிற்கு பணம் சம்பாதிக்க இயலாது.

கன்னி

மோதல்களைத் தவிர்க்க அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் கவனமாகப் பழகவேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது கவனம் தேவை.

பணியிடச்சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. சரியாக திட்டமிட்டு அதனை முறையாக ஆற்றுவது சிறந்தது.

அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரலாம். போதிய அளவு பணம்சம்பாதிக்க இயலாது.

துலாம்

நாளைய நாள் சற்று மந்தமாக இருக்கும். நம்பிக்கையுடன் நேர்மறை எண்ணத்தோடு இருந்தால் உங்கள்முயற்சிகளில் வெற்றி காணலாம்.

பணியில் ஏமாற்றமான சூழ்நிலை காணப்படும். பணியிடச்சூழல் சுமூகமாக இருக்காது. இது உங்களுக்குகவலையை அளிக்கும். மிகுந்த பொறுமை தேவை.

நாளை தேவையற்ற செலவுகள் செய்ய நேரும். இது உங்களுக்கு மிகுந்த கவலையை உண்டாக்கும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும்.

விருச்சிகம்

நாளை மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான சாத்தியம் உள்ளது. உங்கள்சமயோசித புத்தியால் நாளைய நாளை உற்சாகமாக்குவீர்கள்.

உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பாராதஅனுகூலங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். சாதனை படைத்த உணர்வு மனதில் நிரம்பியிருக்கும்.

பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். உங்கள் சேமிப்பை உயர்த்த முடியும்.

தனுசு

நாளை அனைத்தும் சுமுகமாக நடக்கும். உங்கள் சொந்த முடிவுகளை எடுப்பதில் உறுதியாக இருப்பீர்கள். உங்கள் இலக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

பணிச்சூழல் சிறப்பாக காணப்படும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் பெருகிகாணப்படும்.

உங்கள் சம்பாதிக்கும் திறனை உயர்த்த முடியும். கணிசமான தொகை சம்பாதிக்க அதிர்ஷ்டம் உங்களுக்குசாதகமாக இருக்கும்

மகரம்

நாளை மன உளைச்சல் காணப்படும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். பிரச்சினைளைக்கையாள்வதற்கு இது உதவும். வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். நட்பான அணுகுமுறை வேண்டும்.

பணிகளைக் கையாளும்போது கவனமுடன் இருந்தால் விரும்பிய பலன்கள் கிடைக்கும். பணியில் தவறுகள் நேரவாய்ப்புள்ளது.

நாளை பண நஷ்டம் காணப்படுகின்றது. பணம் சம்பாதிப்பதற்கான ஏதுவான சூழ்நிலை இல்லை. செலவுகள்காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

கும்பம்

நாளை நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். நற்பலன் காண உறுதியாக இருக்க வேண்டும். உங்கள்வளர்ச்சிக்கான பாதையில் தடைகளை சந்திக்க நேரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை நாளை தவிர்க்கவும்.

பணியின் போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக ஒழுங்கமைத்து ஆற்றவேண்டியது அவசியம்.

நாளை பண நஷ்டம் காணப்படுகின்றது. பயணத்தின் போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்

நாளை தன்னம்பிக்கையுடன் கானப்படுவிர்கள். இதனால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

வேலை தொடர்பான பயணம் காணப்படும். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம் நல்லபலன் கிடைக்கும்

நாளை நிதிநிலை சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளில் பங்கு கொள்ளலாம். அதனால் உங்கள் நோக்கம்நிறைவேறும்

Related posts

மலையகத்தில் 20 வயது இளைஞனுடன் உறவு வைத்திருந்த 41 வயது பெண்ணுக்கு நடந்த சம்பவம்

News Bird

மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்..! (வீடியோ)

News Bird

மாளவிகாவின் கியூட் போட்டோஸ்-க்கு குவியும் கவிதை மழை

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0