கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகச் செயற்பாடுகளும் பதிவாகியுள்ளன.
அவற்றில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மேல் மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகியுள்ளன.
இதன் காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.
இதற்காக 600 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த அதிகாரிகளால் திடீரென வீதித் தடைகளைப் ஏற்படுத்தி வாகனங்களை சோதித்தல், அவசரச் சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்தல் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.