85.98 F
France
November 21, 2024
இலங்கை

நாட்டில் தற்போது நிலவும் மழை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கக் கூடிய சாத்தியம்..!

நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல்,சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

இலங்கை அடித்த யோகம் – கடந்த மாதம் இத்தனை சுற்றுலா பயணிகளா..?

News Bird

வரலாற்றில் தடம் பதித்த இலங்கை மகளிர் அணி தலைவி சமரி அத்தபத்து!

News Bird

இலங்கை சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாகிரகம்..(வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0