75.18 F
France
October 18, 2024
சர்வதேசம்

அரச உத்தியோகத்தர்களுக்கு ஐபோன் பயன்படுத்த தடை..!

ரஷ்யாவில் உள்ள அரச உத்தியோகத்தர்ககள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் நிறுவனத்தின்சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் சாதனங்களைப் அமெரிக்க உளவு நிறுவனங்கள் உளவு பார்க்கும் நடவடிக்கைகளுக்குபயன்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்கான காரணம் என கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், மெக் முதலான தொலைபேசிகள், கணினிகள்பாதுகாப்பற்றவை என ரஷ்யாவின் சமஷ்டி பாதுகாப்புச் சேவை (எவ்எஸ்பி) தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அரச ஊழயர்கள் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அப்பிள் சாதனங்களைபயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை (17-07-2023) முதல் இத்தடை அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு உக்ரேன் மீதான தாக்குதல்களை ஆரம்பித்த பின்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விடுத்தஉத்தரவில், 2025 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகாதாரம், விஞ்ஞானம், நிதித்துறை முதலான துறைகளில்பயன்படுத்தப்படும் மென்பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் எனத்தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

உமா ஓயா திட்ட அலுவலகத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எல்லவெல்லவாய வீதியில்இன்று (18) காலை கரதகொல்ல உமா ஓயா திட்ட அலுவலகத்திற்கு வெகு தொலைவில் உள்ள இடத்தில்குன்றின் மீது கவிழ்ந்தது.

விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பயணிகள் காயமடைந்து வெல்லவாயவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7.15 மணியளவில் பேரூந்து பயணிக்க ஆரம்பித்ததாகவும், அதிவேகமாக சென்ற பேருந்தின்பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாகவும் அங்கு பயணித்த இளைஞர் ஒருவர்தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை ரூபாய் 30 கோடி சொத்து வைத்துள்ள உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர்!

News Bird

அதிபயங்கர ராணுவங்கள் – முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா..!

News Bird

எலான் மஸ்க் அடுத்த அதிரடி : ட்விட்டர் பதிவு படிக்க கட்டுப்பாடு விதிப்பு

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0