82.38 F
France
December 11, 2024
இந்தியாஇலங்கைசர்வதேசம்

துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 10 பேர் பலி : 38 பேர் படுகாயம்

அமெரிக்காவில் இம்மாதம் பிலடெல்பியா, பால்டிமோர் மற்றும் ஃபோர்ட் வொர்த் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் அரேங்கேறி வரும் துப்பாக்கிசூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டமொன்றினை நிறைவேற்ற அந்நாட்டு ஜனாபதி ஜோ பைடன் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் சுதந்திர தின விடுமுறையான ஜுலை 4 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூர் கேளிக்கை நிகழ்வுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் எட்டு பேர் வரையில் காயமடைந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் பிலடெல்பியா நகரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்திருந்தனர்.

மேலும் கடந்த திங்கட்கிழமை இரவு பால்டிமோர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 28 பேர் வரையில் காயமடைந்தனர். இவர்களில் அதிகமானோர் சிறுவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது.

இந்நாட்டில் 100 பேரிடம் 120 துப்பாக்கிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கிற அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் நோக்கங்கள் தொடர்பில் இதுவரையில் தெளிவாக அறியமுடியவிவ்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

Editor

மனுஷ மற்று்ம் ஹரினின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது!

News Bird

இலங்கையில் “சிசேரியன்” மருந்து தட்டுப்பாட்டுக்கு பணப்பற்றாக்குறை காரணமா..?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0