82.38 F
France
January 18, 2025
இலங்கை

விபத்தில் சிக்கி மேலும் இருவர் நேற்று பலி

நேற்று நடந்த விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியின் கோரக்கான பிரதேசத்தில் பாணந்துறை திசையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் சைக்கிளில் பயணித்தவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

வாதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரகாபொல அங்குருவெல்ல வீதியின் மைனொலுவ பிரதேசத்தில், வரகாபொல திசையிலிருந்து அங்குருவெல்ல நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று பாதசாரி மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 62 வயதுடைய நபர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

Zee Tamil சரிகமபா* பாடல் போட்டியில் இலங்கையில் இருந்து ஒரு இளங்குயில் கூவுகிறது (VIDEO)

News Bird

இன்று முதல் கோதுமை மாவின் விலை குறைப்பு..!

News Bird

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான விசேட அறிவிப்பு

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0