2024 வருடத்தில் அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு தமது பிள்ளைகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்க்கும் பெற்றோர்/ சட்டபூர்வமான பாதுகாவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தரப்பட்டுள்ள ஆலோசனைகளின் படி வழங்கப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய சகல ஆவணங்களுடனும் தமக்குரிய பாடசாலை அதிபர்களுக்கு 2023 ஓகஸ்ட் 18ம்திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
சகல தகைமைகளும் 2023 ஜூன் 30ம் திகதிக்கு செல்லுபடியாகக்கூடிய வகையில் பூர்த்திசெய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்று கல்வியமைச்சு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.