82.38 F
France
November 23, 2024
இலங்கைசர்வதேசம்விளையாட்டு

டுபாயில் வீட்டு வேலை செய்யும் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த இலங்கை வீராங்கனை.!

கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் தேசிய சாதனை படைத்த சச்சினி கௌசல்யா பெரேரா மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு வேலை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் 9 தடவைகள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய சாதனையை நிலைநாட்டி இருந்தார்.

பாதுக்க பிரதேசத்தில் வசிக்கும் இவர், சிறுவயது முதலே விளையாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, 2018 முதல் 2022 வரை தேசிய சாம்பியனானார்.

ஆனால் இந்த அபூர்வ திறமைகளை வெளிப்படுத்திய பின்பும், பொருளாதார நெருக்கடி காரணமாக சச்சினி கௌசல்யா பெரேரா தன் தாய்நாட்டை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது.

சச்சினி துபாய் அரச இல்லத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகின்றார்.

இரண்டு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் சசினி இளைய மகள். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சச்சினியின் தாயார் தற்போது தனியாக வசித்து வருகிறார்.

தான் எதிர்கொண்டுள்ள இந்த நிலை மற்றுமொரு விளையாட்டு வீரருக்கு ஏற்படக் கூடாது எனவும், அது விளையாட்டு அதிகாரிகளின் பொறுப்பு எனவும் சச்சினி சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts

இலங்கையில் நிலநடுக்க அபாயம்…!

News Bird

வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் குறித்து கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன

News Bird

உயர் தர பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியானது..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0