மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் இன்று (17) காலை இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று (17) காலை குறித்த தோட்டத்தில் 4ம் இலக்க மலையில் பணி செய்து கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் குறித்த இடத்திலுள்ள தேயிலை செடிகளின் நடுவில் சிறுத்தை குட்டிகள் இருப்பதை கண்டு தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தல் வழங்கியதன் பின்னர் நல்லத்தண்ணி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டது
குறித்த விடயம் சம்பந்தமாக துரிதமாக விரைந்த வன ஜீவராசிகள் அதிகாரிகள் சிறுத்தை குட்டிகளை பார்வையிட்டதுடன் அதன் தாயை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.