78.78 F
France
January 18, 2025
சர்வதேசம்

கனடாவில் காட்டுத் தீயினால் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் உயிரிழப்பு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ காரணமாக ஒன்பது வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

காட்டுத் தீ புகை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் மரண விசாரணையாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

9 வயதான கார்ட் வீக் என்ற சிறுவனே காட்டு தீ புகையை சுவாசித்த காரணத்தினால் உயிரிழந்துள்ளார.

காட்டுத்தீ புகையினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்ய வேண்டும் என உயிரிழந்த சிறுவனின் தாய சமூக ஊடகங்களின் வாயிலாக கோரியுள்ளார்.

மாகாணத்தில் மாகாணத்தில் சுமார் 370 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு இம்முறை காட்டுத்தீ அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்கம் ..!

News Bird

ஆசிய கிண்ண டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு.!

News Bird

குர்-ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0